பூநகரி - கிராஞ்சி மக்களின் உயிரை பறிக்கும் வீதி!
உரிய முறையில் சீரமைக்கப்படாத பூநகரி - கிராஞ்சி பிரதான வீதி ஊடாக பயணிக்கின்ற மக்கள் உயிரையும் துறக்கின்ற அளவுக்கு பல அசௌகரியங்களை நாளாந்தம் எதிர்கொண்டிருக்கின்றனர்.
இந்த பிரதான வீதியினுடைய சிதைவுகள் காரணமாக அந்த வீதியால் பயணிக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களை கடந்து தங்களுடைய வாழ்வாதாரத்தை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்த வீதியைத் திருத்தி தருவதாக jங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்படுகின்ற நிலையில் 15- 20 தேர்தல்களுக்கு முகங்கொடுத்த போதும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் 40 - 50 வருடமாக குன்றும் குழியுமாக இந்த பாதை இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மழை காலத்தில் வெள்ளம் வந்த பின்னர் உழவியந்திரத்தில் தான் நோயாளிகளையும், பிள்ளைகளையும் கர்ப்பிணிப் பெண்களையும் ஏற்றுவதாகவும், இந்த பாதையால ஒரு விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலும் பல வியடங்களை ஐபிசி தமிழின் உண்மைகள் பேசட்டும் நிகழ்ச்சியில் காண்க...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |