சீன, இலங்கை தொழிலதிபர்கள் கட்டுநாயக்காவில் கைது
31.38 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டைசட்டவிரோதமாகக் கொண்டு வந்த 18 சீன மற்றும் இலங்கை விமானப் பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை (30) துபாய் மற்றும் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்களில் பயணித்த சந்தேக நபர்கள், பசுமைவழிப் பாதை வழியாக சிகரெட்டை கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.
அனைவரும் தொழிலதிபர்கள்
அவர்களில் 16 சீன நாட்டினரும், இரண்டு இலங்கையர்களும் அடங்குவர்; இவர்கள் அனைவரும் தொழிலதிபர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் கொண்டு வந்த 27 பயணப் பைகளிலிருந்து, சீனாவில் தயாரிக்கப்பட்ட 209,200 சிகரெட்டுகள் அடங்கிய 1,046 அட்டைப் பெட்டிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகளும், சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளும் மீட்டுள்ளனர்.
விமான நிலைய காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |