இலங்கையுடனான உறவு தொடர்பில் சீன அரச தலைவர் வெளியிட்ட அறிவிப்பு
கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டதில் இருந்து சீனாவும் இலங்கையும் ஒருவரையொருவர் ஆதரிப்பதாகவும், பாரம்பரிய நட்பு உச்சத்தை எட்டியுள்ளது என்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
ன-இலங்கை இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 65வது ஆண்டு மற்றும் இறப்பர் அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இலங்கையில் நடைபெற்ற கட்சிகளின் கூட்டத்தில் இணையவழியில் உரையாற்றும் போதே சீன அரச தலைவர் ஷி ஜின்பிங் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
70 வருடங்களுக்கு முன்னர் சீனாவும் இலங்கையும் பல தடைகளைத் தாண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க அரிசி இறப்பர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதாகவும் இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவுப் பரிமாற்றங்களுக்கு இது வழிவகுத்ததாகவும் சீ ஜின்பிங் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 65வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CPC) இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து சீன-இலங்கை உறவுகளின் நிலையான வளர்ச்சிக்கும் ஊக்குவிப்புக்கும் மேலும் பங்களிக்க உறுதிபூண்டுள்ளது. பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றை ஜி ஜின்பிங் வலியுறுத்தினார்.
