சீனாவின் மிகப் பாரிய அத்துமீறல்- பதிலடிக்குத் தயாராகவுள்ள தாய்வான்!
தாய்வான் வான் பரப்புக்குள், சீனாவின் 38 பேர் விமானங்கள் அத்துமீறி பறந்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் தேசிய தினத்தன்றே இவ்வாறு போர் விமானங்கள் அனுப்பபட்டுள்ளன. இது சீனாவின் மிகப் பெரிய அத்துமீறல் எனவும் தாய்வான் சுட்டிக்காட்டியுள்ளது.
சீனாவின் அத்துமீறல் குறித்துக் கருத்துத் தெரிவித்த தாய்வான் பாதுகாப்பு அமைச்சர்,
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் நேற்று வெள்ளிக்கிழமை, முதலில் 25 போர் விமானங்களை பறக்கவிட்டு, பின்னர் அன்றிரவு மேலும் 13 விமானங்களை அனுப்பியது.
அணுவாயுத குண்டுகளைக் கொண்ட போர் விமானங்கள் தமது எல்லைக்குள் பறந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சீனாவின் அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாய்வான் போர் விமானங்கள் மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணை திட்டங்களை தயார்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சீனா, தாய்வானை தமது நாட்டிலிருந்து பிரிந்து சென்ற மாநிலமாக கருதுவதாகவும் கருத்துகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை சீனாவின் ஆக்கிரமிப்பானது பிராந்தியத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவித்துள்ளதாகவும் தாய்வான் தலைவர் சூ செங் சங் தெரிவித்துள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
