தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா விடுத்த எச்சரிக்கை!
தைவான் தொடர்பான விவகாரங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளுமாறு அமெரிக்காவை சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோவுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது அவர் இதனை தெரிவித்ததாக சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
தைவான் விவகாரத்தில் எடுக்கப்படும் ஒரு சிறிய நகர்வு கூட ஒட்டுமொத்த சூழ்நிலையையும் பாதிக்கக்கூடும் என்று குறிப்பிட்ட வாங் யி, சீனாவும் அமெரிக்காவும் அனைத்து வகையான அபாயங்களையும் நிர்வகிக்க இணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ட்ரம்புக்கு எச்சரிக்கை
கடந்த மே மாத நடுப்பகுதியில் பெய்ஜிங்கில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையே நடைபெற்ற உச்சிமாநாட்டைத் தொடர்ந்து இந்தத் தொலைபேசி உரையாடல் நிகழ்ந்துள்ளது.

அந்த மாநாட்டில், தைவான் குறித்த இரு நாடுகளின் கருத்து வேறுபாடுகளைத் தவறாகக் கையாள்வது சீனா-அமெரிக்க உறவுகளை மிகவும் ஆபாயகரமான இடத்திற்கு தள்ளிவிடும் என்று ஷி ஜின்பிங், ட்ரம்புக்கு எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்