“சிறிலங்காவில் சத்தமில்லாத யுத்தத்தை முன்னெடுக்கும் சீனா”

India Jaffna People Chine SriLanka
By Chanakyan Dec 19, 2021 11:06 AM GMT
Report

சீனா இலங்கை மீது ஒரு சத்தம் இல்லாத யுத்தம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றது என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

இலங்கையும் ஒரு மிகமோசாமான பொருளாதார நெருக்கடியினை சந்திக்கக்கூடிய நிலையில் இன்று சீனாவின் பக்கம் சாய்ந்து நிக்கின்றது இந்த நிலமையினை சீனாவே உருவாக்கி நிற்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

அண்மை நாட்களில் வடமாகாணத்தில் சீனத்தூதுவரின் வருகை செயல்பாடுகள் தொடர்பிலும் தமிழ் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களின் கருத்துக்களையம் மக்கள் அறிந்துகொள்ளவேண்டிய தேவையுள்ளது.

சீனாவின் இலங்கை மீதான ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் முன்னர் நாங்கள் கருத்துக்களை சொல்லிவந்துள்ளோம். சீனா இலங்கை மீது ஒரு சத்தம் இல்லாத யுத்தம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றது.

அதன் விளைவுகள் மிக பாரதூரமாக தமிழர் தாயகத்தில் அமையும் என்பதையும் தெளிவாக கூறியுள்ளோம். சீனாவின் அடுத்த கட்ட நகர்வு இலங்கையில் தமிழர் தாயகத்தில் வடமாகாணத்தினை கைப்பற்றும் நோக்குடன் இலங்கை அரசின் அமைச்சு பொறுப்புக்களில் இருக்கின்ற அரசியல் கட்சிகளின் அனுசரணையுடன் வடமாகாணத்தில் கால்பதிக்க நினைக்கின்றது.

சீனா உலகத்தில் எந்த நாடுகளில் அபிவிருத்தி என்ற போர்வையில் சென்றுள்ளதோ அந்த நாடு அபிவிருத்தி அடைந்ததாக வரலாற்றில் நான் கண்டதில்லை மாறாக அந்த நாடுகள் சீனாவிடம் அடிமைப்படுத்தப்பட்டு பொருளாதாரரீதியாக வளர்ச்சியடையமுடியாமல் பின்னடைவினை நோக்கி சென்று நாடு முன்னேற்றம் கண்டதாக நாங்கள் அறிந்ததில்லை.

இலங்கையும் ஒரு மிகமோசாமான பொருளாதார நெருக்கடியினை சந்திக்கக்கூடிய நிலையில் இன்று சீனாவின் பக்கம் சாய்ந்து நிக்கின்றது இந்த நிலமையினை சீனாவே உருவாக்கி நிக்கின்றது.

இது தொடர்பில் தமிழர்கள் தரப்பினை சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் மௌனமாக இருக்கின்றார்கள் சீனாவிற்கு எதிராக பலமான எதிர்பினை கொடுக்க தாமதித்து வருகின்றார்கள்.

அண்மையில் சீனத்தூதுவர், யாழ்,மன்னார் மாவட்டங்களுக்கு சென்று கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிட்டு சென்றுள்ளார். அந்த இடங்களில் வளங்களை ஒளிப்பதிவுசெய்து எமது வளங்களின் ஆக்கிரமிப்பினை எவ்வாறு செய்யலாம் என்ற திட்டத்தினை ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.

பருத்தித்துறை என்பது மிக முக்கியமான முனை அது ஒரு துறைமுகம் யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவின் வேதாரணியத்திற்கும் மிக அண்மையாக இருக்கின்றது எங்களுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் ஒரு அச்சுறுத்தலை சீனா கொடுப்பதாகத்தான் நாங்கள் கருதுகின்றோம்.

இந்த செயற்பாடு எதிர்காலத்தில் மிகமோசமான பாரதூரமான விளைவுகளை தமிழர் தாயகத்தில் ஏற்படுத்தும். மன்னாருக்கு சென்று இராமர் பாலம் வரை சீனத்தூதர் சென்றுள்ளார்.

வடமாகாண அபிவிருத்திக்காக இராமர் பாலத்தினை சென்று பார்க்க வேண்டிய தேவை அவருக்கு இல்லை இதுவும் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடகத்தான் இருக்கின்றது. எனவே இந்தியாவின் நலன்சார்ந்த விடயத்தில் ஈழத்தமிழர்கள் அக்கறையுடன் இருக்கவேண்டிய தேவை இப்போது இருக்கின்றது. உலகத்தில் தமிழ்மக்களுக்கு ஒரு தீர்வினை வழங்க வேண்டும்.

ஒரு அங்கிகரிக்கப்பட்ட ஒரு இனமாக வடகிழக்கில் வாழ்கின்ற தமிழர்கள் சம உரிமையுடன் இலங்கைத்தீவில் வாழ அதற்கான திட்ட வரைபுகளை உருவாக்கி இலங்கையின் அரசியல் யாப்பில் புதிய நடைமுறைச்சட்டத்தினை கூட கொண்டுவந்தது.

இந்தியா தான் இந்தியாவின் அனுசரணையும் ஆதரவும் தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களுக்கு தேவையாக உள்ளது. ஈழத்தமிழர்களை இந்தியாவினுடைய உறவுமுறையில் இருந்து பிரித்தெடுப்பதற்காக அந்த உறவினை சிதைப்பதற்காக அபிவிருத்தி என்ற போர்வையில் சீனா மக்களுக்குள் புகுந்துள்ளது.

இலங்கையின் கடற்தொழில் அமைச்சர் அவர்கள் சீனாவினை இங்கு கொண்டுவந்துவிட்டுள்ளார். சீனாவுடன் முழுமையாக இணைந்து வேலைசெய்கின்றார்.

கடற்கரை சமூகம் ஊடாக சீனாவின் கைகளுக்குள் சிக்கக்கூடிய ஆபத்தான நிலமையும் இங்கு இருக்கின்றது. நாங்கள் எங்களிடம் இருக்கின்ற வளங்களை வைத்துக்கொண்டு அதனை பலமாக பல்மடங்காக வளர்த்தெடுப்பதற்கான முயற்சியினை சுயமாக சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்