அத்துமீறும் சீன கடற்படை: பிலிப்பைன்ஸ் மீன்பிடி படகு மீது நீர்த்தாரை பிரயோகம்(காணொளி)
தென் சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டின் மீன்பிடி படகு மீது சீன கடலோரக் காவல் படை தண்ணீர் பாய்ச்சி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் சீன கடல் பகுதியில் உள்ள மணல்திட்டு ஒன்றை சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இரண்டு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மணல்திட்டுக்கு அருகில் நின்ற பிலிப்பைன்ஸ் நாட்டின் மீன்பிடி படகு ஒன்றை சீன கடற்படையும், சீன ஆயுதக் குழுவின் படகும் இணைந்து தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் குற்றச்சாட்டு
சீனாவின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்துள்ள பிலிப்பைன்ஸ் மற்றும் அதன் நட்பு நாடான அமெரிக்கா சீனாவின் நடவடிக்கைக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
BREAKING:
— Visegrád 24 (@visegrad24) December 9, 2023
China vessels are using water cannons to attack Philippine state vessels near the Scarborough Shoal which is in the Exclusive Economic Zone of the Philippines.
The Chinese Navy has been trying to assert dominance in the area since 2012
???? pic.twitter.com/SY2Mi8V8Kx
அத்தோடு, சீனா தன்னுடைய அதிகாரம் முழுவதையும் தென் சீன கடல் பகுதியில் நிலைநாட்ட முயன்று வருகிறதாகவும் சர்வதேச கடல் வழித்தட உரிமையை சீனா பறிப்பதாகவும் அமெரிக்கா தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |