இலங்கையிலிருந்து சீனா சென்ற சீனப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!
srilanka
covid19
corona
colombo
china
By S P Thas
இலங்கையில் பணியாற்றிவிட்டு சீனாவிற்கு நாடு திரும்பிய சீனப் பிரஜையொருவருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சீனப் பிரஜை, ஷங்காய்க்கு சென்றிருந்த போது நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த 13ம் திகதி ஷங்காய் புடோங் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக குறித்த சீனப் பிரஜை இலங்கையிலிருந்து சீனா சென்றுள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய ஐந்து சீனப் பிரஜைகளுக்கு இவ்வாறு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
மாலைதீவு, ஜமய்க்கா, ஜப்பான், நைஜீரியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து சீனா திரும்பியவர்கள் இவ்வாறு கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி