சீனாவில் இப்படியும் ஒரு நிலை : திருமணத்தில் ஆர்வம் காட்டாத இளைஞர்கள்
சீனாவில்(china) இளைஞர்கள் திருமணம் செய்யும் விகிதங்கள் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளைப் பெறவும் ஊக்குவிக்க சீன அரசாங்கம் பல்வேறு ஊக்கத் திட்டங்களைச் செயல்படுத்தி வந்த போதிலும், கடந்த ஆண்டு 6.1 மில்லியன் இளைஞர்களே திருமணங்களைப் பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறைந்து செல்லும் திருமண பதிவு
இது 2023 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கையை விட 20.5 சதவீதம் குறைவு என்று சீன சிவில் விவகார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகரிக்கும் விவாகரத்து
1986 ஆம் ஆண்டு சீனாவின் சிவில் விவகார அமைச்சகம் திருமணப் பதிவு புள்ளிவிவரங்களைக் கண்காணிக்கத் தொடங்கியதிலிருந்து, கடந்த ஆண்டு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான திருமணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சீனாவில் விவாகரத்துகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகவும், 1.1% அதிகரித்து 2.62 மில்லியனாக இருப்பதாகவும் ECNS செய்தி சேவை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)