சீனாவுடனான அநுரவின் இரகசிய நகர்வு : பாரிய ஆபத்தில் சிக்கப்போகும் இந்தியா
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) அண்மைக்கால அரசியல் நகர்வுகள் மற்றும் முடிவுகள் இந்தியாவை (India) பாரிய ஆபத்திற்குள் தள்ளப்போவதாக பிரித்தானிய (United Kingdom) அரசியல் ஆய்வாளர் அரூஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை இந்தியாவிற்கு எதிரான சக்திகளுடன் கட்டாயம் கைக்கோர்ககும் என்பது இந்தியாவிற்கு தெரிய வேண்டிய முக்கியமான விடயமாகும்.
இந்தியாவின் வெளிவிவகார கொள்கைகளில் ஏற்பட்ட தொய்வும் மற்றும் இந்திய மாநிலங்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல்களால் இந்தியா பாரிய தோல்வியை சந்திக்கவுள்ளது.
அத்தோடு, இலங்கையை பொறுத்தமட்டில் இந்தியாவிற்கு இலங்கையை அனுசரித்து செல்ல வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலையுள்ளது” என தெரிவித்த அவர் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளுடானான இலங்கையின் அரசியல் நகர்வு குறித்து தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |