எதிர்க்கட்சியின் முக்கிய எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு (Sujeewa Senasinghe) நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் ஐந்தாம் திகதி கொழும்பு (Colombo) கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க பயன்படுத்தும் டொயோட்டா லேண்ட் குரூசர் ரக வாகனம், கடந்த நவம்பர் எட்டாம் திகதி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தில் முன்னிலை
குறித்த வாகனம், சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட வாகனம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அது தொடர்பில் தற்போது கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காவல்துறையினர் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளனர்.
இதனடிப்படையில், எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஐந்தாம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சுஜீவ சேனசிங்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்