உக்ரைன் போர்க்களத்தில் சிக்கிய சீனர்கள்
ரஷ்யா(russia) சார்பில் போரில் ஈடுபட்ட சீனர்கள்(china) இருவர் தங்கள் நாட்டு இராணுவத்திடம் சிக்கி உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி(Volodymyr Zelensky) அறிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு தேடுவோரை ஏமாற்றி அழைத்து வந்து போரில் ஈடுபடுத்துவதாக ரஷ்யா மீது குற்றச்சாட்டு உள்ளது.ஆனால், ரஷ்யாவின் கூட்டாளி நாடுகளான வடகொரியா, சீனா, பெலாரஸ் போன்ற நாடுகள், தெரிந்தே ரஷ்ய ராணுவத்துக்கு ஆட்கள் விநியோகம் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
உக்ரைன் ஜனாதிபதியின் அறிவிப்பு
இந்த நிலையில் ரஷ்ய இராணுவத்துக்காக போரிட்ட சீனர்கள் இருவரை உக்ரைன் இராணுவம் கைது செய்துள்ளது. இதை அந்த நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.
Our military has captured two Chinese citizens who were fighting as part of the Russian army. This happened on Ukrainian territory—in the Donetsk region. Identification documents, bank cards, and personal data were found in their possession.
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) April 8, 2025
We have information suggesting that… pic.twitter.com/ekBr6hCkQL
ஐநா பாதுகாப்பு சபையின் பொறுப்புள்ள நிரந்தர உறுப்பினர் என்ற நம்பகத்தன்மையை இழக்கும் வகையில் இந்த செயல்பாடு அமைந்துள்ளது.இது தொடர்பாக சீன அரசிடம் விளக்கம் கேட்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக உக்ரைன் போர்க்களத்தில் வடகொரிய இராணுவ வீரர்களை உக்ரைன் இராணுவத்தினர் சிறை பிடித்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
