கோடிக்கணக்கில் போர் விமானங்களை வாங்கி குவிக்கும் இந்தியா
India
France
By Sumithiran
தனது கடற்படையை வலுப்படுத்தவென ரூ.63,000 கோடியில் 26 ரபேல் விமானங்களை இந்தியா(india) வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸ்(france) நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரபேல் விமானங்களை இந்தியா ஏற்கனவே வாங்கியுள்ளது.
விமானப்படையில் 36 ரபேல் விமானங்கள்
விமானப்படையில் 36 ரபேல் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது கடற்படைக்கும் ரபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு பேச்சு நடத்தி வந்தது.
இந்நிலையில், பிரான்சிடம் இருந்து ரூ.63,000 கோடியில் 26 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
26 ரபேல் விமானங்களை வாங்க முடிவு
ஒற்றை இருக்கை கொண்ட 22 விமானங்கள், இரண்டு இருக்கை கொண்ட 4 விமானங்கள் என மொத்தம் 26 ரபேல் விமானங்களை இந்தியா வாங்குகிறது. இதுதொடர்பாக இந்தியா, பிரான்ஸ் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி