மலேசியா செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்த சீன தம்பதி கைது
Bandaranaike International Airport
China
Crime
By Sumithiran
1500 கோடி ரூபாய் மோசடி
கணனி மென்பொருளை அறிமுகப்படுத்தி பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து 1500 கோடி ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சீன தம்பதியரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல உத்தரவிட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர்கள் மலேசியா செல்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தங்கியிருந்த வேளையில் நேற்று (12) இரவு கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
இதன்படி கொழும்பு 05 இல் தற்காலிகமாக வசித்து வந்த 35 வயதான சீன ஆணும் 25 வயதுடைய பெண்ணும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
