கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய பெண் கைது
arrested
woman
katunayake airport
By Sumithiran
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்றுமாலை வந்திறங்கிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உகண்டாவிலிருந்து கட்டார் வழியாக வந்த 45 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டவராவார்.
விமான நிலையத்தில் வந்திறங்கிய குறித்த பெண்ணின் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
அவரது வயிற்றுப் பகுதியை ஸ்கான் ஊடாகபரிசோதனை செய்ததில் போதை வில்லைகள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து வயிற்றுப் பகுதியிலிருந்து சுமார் 51 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டன.
இவற்றில் கொக்கெயின் போதைப்பொருள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்