சீன உயர் இராஜதந்திரி இலங்கைக்கு திடீர் விரைவு - ரணில் இந்தியாவால் திரும்பும் வரை காத்திருப்பாம்..

Narendra Modi China India
By Vanan Jul 19, 2023 04:00 PM GMT
Report

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்திற்கு முன்னதாக சீனாவின் உயர்மட்ட இராஜதந்திரியொருவர் இலங்கைக்கு பயணம் செய்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது  சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்களை சந்தித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான யுவான் ஜியாஜூன் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணிலின் இந்திய விஜயம்

சீன உயர் இராஜதந்திரி இலங்கைக்கு திடீர் விரைவு - ரணில் இந்தியாவால் திரும்பும் வரை காத்திருப்பாம்.. | Chinese Diplomat Yuan Jiajun To Visit Sri Lanka

உலக ஒழுங்கில் ஆசிய பசுபிக் பிராந்தியம் முக்கியத்துவம் பெற்றுவரும் நிலையில், இலங்கையை மையப்படுத்திய உலக வல்லரசு நாடுகளின் நகர்வுகள் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக இலங்கையில் முதலீடுகளை செய்வதன் மூலம் தனது ஆதிக்கத்தை செலுத்த சீனா முயன்றுவரும் நிலையில், இது தமது நாட்டின் நலன்களுக்கு அச்சுறுத்தலானது என இந்தியா கருதி வருகின்றது.

இந்த நிலையில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 21 ஆம் திகதி இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்து, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார்.

இதன் பின்னணியில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் குழு உறுப்பினரும், சீனாவில் சோங்கிங் நகர சபையின் செயலாளருமான யுவான் ஜியாஜூன் இன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

அவரின் இந்த விஜயத்தை உறுதி செய்துள்ள போதிலும் அதற்கான காரணங்கள் எதனையும் இலங்கைக்கான சீனத் தூதரகம் வெளியிடவில்லை.

யார் இந்த யுவான் ஜியாஜூன்

சீன உயர் இராஜதந்திரி இலங்கைக்கு திடீர் விரைவு - ரணில் இந்தியாவால் திரும்பும் வரை காத்திருப்பாம்.. | Chinese Diplomat Yuan Jiajun To Visit Sri Lanka

சீனாவின் லியோவ்னிங் மாகாணத்தின் டொங்ஹுவா பிராந்தியத்தை சேர்ந்த யுவான் ஜியாஜூன், பொறியியலில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

குறிப்பாக தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கிய ஆராய்ச்சியாளரான அவர், எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.

எனினும் இவரது இந்த திடீர் விஜயத்திற்கான காரணத்தை தூதரகம் அறிவிக்கவில்லை.   சர்வதேச விண்வெளி சம்மேளனத்தின் துணைத் தலைவராகவும் யுவான் ஜியாஜூன் பணியாற்றியுள்ளார்.

ஜுயங் மாகாணத்தின் துணை ஆளுநராகவும் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை பதவி வகித்த அவர், 2017 ஆம் ஆண்டு மாகாண ஆளுநராக பெயரிடப்பட்டுள்ளார்.

சீன கமியூனிஸ்ட் கட்சியின் 19 ஆவது மத்திய குழுவின் உறுப்பிராகவும் காணப்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025