இலங்கையில் சீன ஆதிக்கம்! முறியடிக்க போர் - அரசியல் ஆய்வாளர் தகவல்
சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க போர் வேண்டும்
இலங்கையில் சீனா அதிக முதலீடுகளை மேற்கொண்டுள்ளமையினால், நாட்டில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியாது என அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க வேண்டுமானால் போர் இடம்பெற்றாலே அதனை முறியடிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களிடம் தமக்கான ஒரு இடம் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ் அரசியல் தலமைகளை சந்தித்து பேச்சு வார்தை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் மிகப் பெரும் சர்ச்சை
இலங்கைக்கு வரவுள்ள சீன உளவுக் கப்பலால் சர்வதேச அளவில் மிகப் பெரும் சர்ச்சை வெடித்தது.
அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட நிலையில், அதனை மறுக்கும் உரிமையை இலங்கை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இலங்கை அரசானது, சீனாவின் ஆராய்ச்சி கப்பல் தான் இலங்கைக்கு வருகிறது. அனுமதி அளித்துள்ளோம் எனக் கூறியுள்ளது.
இலங்கைக்குள் சீனாவின் கப்பலை அனுமதிக்கக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருந்து வருகிறது.
ஆரம்பம் முதலே இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் நீறுபூத்த நெருப்பாக பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
