இலங்கையில் சீன வெளியுறவு அமைச்சர் மின்னி மறைந்ததேன்?
இலங்கை உட்பட்ட நாடுகள் மீதான சீனாவின் நியூ இம்பீரியலிசம் எனப்படும் (New imperialism) புதிய ஏகாதிபத்தியம் குறித்தும் எச்சரிக்கப்பட்ட நிலையில் இப்போது பூகோள ஒழுங்கு ட்ரம்ப்பின் புதிய ஏகாதிபத்தியத்துக்குள் நிற்பதான பேசுபொருள் வந்துள்ள பின்னணியில் இன்று இலங்கையில் கால்பதித்த சீன வெளியுறவு அமைச்சர் வந்தவேகத்தில் பறந்திருந்தார்.
ஆரம்பத்தில் சிறிலங்கா ஊடகங்கள் குறிப்பிட்டது போல இது ஒரு அதிகாரபூர்வ பயணம் அல்லாமல் ஒரு இடைத்தங்கல் பயணமாக இருந்தாலும் இன்று முற்பகல் வாங் யியும் அவரது குழுவும் இலங்கையில் இருந்து சீனாவுக்கு பறக்கமுன்னர் சில துரித காரியங்கள் இடம்பெற்றிருக்கக்கூடும்.
கொழும்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளும் இல்லாத பயணமாக இது அடையாளப்படுத்தப்பட்டாலும் இந்த சிலமணி நேர தரிப்பை மாலதீவில் செய்யாமல் கொழும்பில் சீன அமைச்சர் அதனை மேற்கொண்டமை ஒரு குறியீட்டு செய்தி.
இப்போது இலங்கையின் கல்வித்துறையில் ஜேவிபி தனது திணிப்பை செய்வதான குற்றச்சாட்டுகள் கிளம்ப முன்னாள் ஜேவிப்பிக்காரும் தெற்கின் வீராப்பு அரசியல் சண்டயர்களில் ஒருவருமான விமல் வீரவன்ச தனது சகபாடிகளுடன் சிறிலங்கா பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணியை வீட்டுக்குப் போகச்சொல்லி (Harini Go Home) ஒரு போரட்டத்தை ஆரம்பித்தார்.
இதற்கிடையே ஏறக்குறைய நான்கு ஆண்டுகால கொழும்பு மிசனுக்குப் பின்னர் ஜனவரி 16 ஆம் திகதி இலங்கையை விட்டு வெளியேறும் அமெரிக்க தூதர் ஜூலி சங்குக்குரிய பிரதான பிரியாவிடை நிகழ்வு இன்று நடந்த நிலையில் யூலிசங் முன்னைய ஜோ பைடன் கால இராஜதந்திரியாக இருந்தாலும் ட்ரம்ப் ஆட்சியின் இலங்கை மீதான கண்களுக்கு உகந்த சூழ்நிலைகளை உருவாக்கிவிட்டு பயணிக்கும் நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு..
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |