இலங்கையில் சீனர்கள் செய்த மோசடி அம்பலம்
Colombo
fraud
Chinese
exposed
By Vanan
கொழும்பு துறைமுகத்தின் ஊடாக கொழும்பு துறைமுக நகருக்குள் செல்லும் வீதியை நிர்மாணித்து வரும் சீன நிறுவனத்தின் ஊழியர்கள், தேசிய நீர் வழங்கல் சபைக்குச் சொந்தமான குழாய் மூலமாக மோசடியாக தண்ணீரை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் ஊழியர்கள், துறைமுகத்தின் கிழக்கு முனையம் அமைந்துள்ள திசையில் சட்டவிரோமாக குழி ஒன்றை தோண்டி மணலை அப்புறப்படுத்தியமை தொடர்பில் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது.
சீன நிறுவனத்தின் ஊழியர்கள் குழாயை பயன்படுத்தி சட்டவிரோதமாக தண்ணீரை பெற்றுள்ளனர் என்பதை விசாரணையில் அதிகாரிகள் கண்டறியந்துள்ளனர்.
இதனையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி