சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன பிரஜைகள் கைது!
சட்டவிரோதமான முறையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்த சீன பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று (05) அதிகாலை 1.10 மணியளவில் கட்டுநாயக்க விமானம் நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 36,30,000 ரூபாய் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
24,200 சிகரெட்டுகள் பறிமுதல்
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சந்தேக நபர்கள் சீனாவின் குன்மிங்கிலிருந்து நாட்டிற்கு வந்துள்ளனர்.

இதன்போது, சந்தேக நபர்கள் கொண்டு வந்த பயணப் பைகளில் இருந்த 24,200 சீனத் தயாரிப்பு சிகரெட்டுகள் அடங்கிய 121 அட்டைப் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் சீன நாட்டை சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடையவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |