கிரீன்லாந்தை இலக்கு வைக்கும் சீன - ரஷ்ய அச்சுறுத்தல்! வல்லரசுகளுக்கு ட்ரம்பின் எச்சரிக்கை
கிரீன்லாந்தின் பாதுகாப்பு மற்றும் உலக அமைதியை மேற்கோள் காட்டி, டென்மார்க் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட truthsocial அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.
2026 பெப்ரவரி 1 முதல் டென்மார்க், நோர்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, யுனைடெட் கிங்டம், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் அனைத்து பொருட்களுக்கும் 10% வரி விதிக்கப்படும் என்றும் தனது பதிவில் கூறியுள்ளார்.
25% ஆக உயர்த்தப்படும் வரி
தொடர்ந்து, 2026 ஜூன் 1 முதல் இந்த வரி 25% ஆக உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வரி விதிப்பு, கிரீன்லாந்தை அமெரிக்கா “முழுமையாக வாங்கும்” ஒப்பந்தம் எட்டப்படும் வரை தொடரும் என டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக கிரீன்லாந்தை வாங்க முயன்று வருவதாகவும், பல ஜனாதிபதிகள் இதற்காக முயற்சித்தாலும் டென்மார்க் தொடர்ந்து மறுத்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா மற்றும் ரஷ்யா
மேலும், சீனா மற்றும் ரஷ்யா கிரீன்லாந்தில் ஆர்வம் காட்டி வருவதாகவும், இதனால் உலக பாதுகாப்பு ஆபத்தில் இருப்பதாகவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்றும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கும், “கோல்டன் டோம்” எனப்படும் நவீன பாதுகாப்புத் திட்டங்களின் செயல்திறனுக்கும் கிரீன்லாந்து முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட நாடுகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய “வலுவான நடவடிக்கைகள் அவசியம்” என்றும் ட்ரம்ப் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்புடைய செய்தி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |