சர்ச்சையை ஏற்படுத்திய சீனக் கப்பல்..! இராஜதந்திர விவகாரம் இல்லை - ஹரீன் பெர்ணான்டோ
சீனா கப்பல்
சீனா கப்பலின் இலங்கை விஜயம் குறித்த சர்ச்சைக்கு மத்தியில் இந்தியா நிலைமையை புரிந்து கொண்டுள்ளதால் கப்பல் விஜயம் பாரிய இராஜதந்திர சர்ச்சையை ஏற்படுத்தாது என இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அஹமதாபாத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக அஹமதாபாத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் சீனா இலங்கையில் பல முதலீடுகளை மேற்கொண்டுள்ளது கடந்த காலங்களில் இலங்கையின் தேவைகளை புரிந்துகொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒரு சிறிய நாடு இலங்கை அனைவருடனும் சிறந்த உறவை பேணுகின்றது இந்தியா இதனை புரிந்துகொள்ளும் என நான் நிச்சயமாக கருதுகின்றேன்.
இந்தியாவுடன் எங்களிற்கு சிறந்த இராஜதந்திர உறவுகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே இதனை பாரிய இராஜதந்திர விவகாரமாக கருதவேண்டியதில்லை என நான் நினைக்கின்றேன் என ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மாலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்,