இலங்கைக்கு வந்து குவியவுள்ள சீன சுற்றுலா பயணிகள்(படங்கள்)
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர் சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து இலங்கைக்கு வந்த முதல் சீன சுற்றுலாப் பயணிகள் குழு, 03/10 இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
181 பேர் கொண்ட இந்த சீன சுற்றுலாப் பயணிகள் குழு 07 நாட்களுக்கு இலங்கையில் தங்கியிருக்கும்
வரவேற்க சென்ற அமைச்சர்
03/10 இரவு 06.51 மணியளவில் சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து சீன ஈஸ்டன் ஏர்லைன்ஸ் MU-231 விமானத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhen Hong மற்றும் சிறிலங்கா சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு வருகை தந்தனர்.
ஒவ்வொரு வாரமும்
இனி ஒவ்வொரு வாரமும் சீனாவின் ஷாங்காய் மற்றும் குன்மிங் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து சீன ஈஸ்டன் ஏர்லைன்ஸின் 06 விமானங்கள் சீன சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும்.
இலங்கைக்கு வந்த முதல் சுற்றுலாப் பயணிகள்
முன்னதாக 03/01 அன்று, சீனாவின் குவாங்சோவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 117 சுற்றுலாப் பயணிகளுடன் சிறி லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது, கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு சீனாவிலிருந்து இலங்கைக்கு வந்த முதல் சுற்றுலாப் பயணிகள் இவர்களாவர்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)