நேபாள வெள்ளப்பெருக்கு: இரண்டு மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்
நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
யேசுவா கோஸ்பல் மினிஸ்டிரிஸ் எனும் யூடியூப் பக்கத்தில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட காணொளியில், நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படப் போவதாகக் கணித்துக் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள காணொளி
இதுபற்றி, கடந்த ஜூன் 12 ஆம் திகதி அவர் வெளியிட்டுள்ள காணொளியில், “இன்று ஜூன் 12 2026. நேபாளத்தில் ஒரு பெரிய காட்டுத் தீ எரிவதை நான் பார்க்கிறேன். நேபாளத்தின் வனப்பகுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். நேபாளத்தைத் தாக்கும் நிலநடுக்கங்களை நான் பார்க்கிறேன்.
இந்த நிலநடுக்கம் 7 முதல் 8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்தவையாக இருக்கும். இதனால், சிலர் பலியாவதையும் நான் பார்க்கிறேன். நான் வெள்ளத்தைப் பார்க்கிறேன், தண்ணீரைப் பார்க்கிறேன்
நேபாளத்தின் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. நேபாளத்துக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார். வெள்ளம் ஏற்படுவதை முன்கூட்டியே கணித்த பாதிரியாரின் காணொளி இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |