யாழில் இடி மின்னல் தாக்கத்தால் சேதமடைந்த தேவாலயம்!
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடி மின்னல் தாக்கத்தால் தேவாயலம் ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழில் நேற்றிரவு (06) நிகழ்ந்த இடி மின்னல் தாக்கத்தால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தினை யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
வேளாங்கண்ணி தேவாலயம்
அதன்படி, உடுவில் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J/187 சங்குவேலி கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்திலேயே இந்த இடிமின்னல் தாக்கம் இடம்பெற்றது.

அத்துடன் இந்த இடி மின்னல் தாக்கத்தால் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிலவிய சீரற்ற காலநிலையினால் 627 பேர் உயிரிழந்ததுடன் 190 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |