புனித அந்தோனியாரின் திருச் சொரூபங்கள் உடைப்பு! மன்னாரில் அதிர்வலை ( படங்கள்)
Mannar
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Vanan
புனித அந்தோனியாரின் திருச் சொரூபங்கள் உடைப்பு
மன்னார் - கஜிவத்தை பகுதியில் புனித அந்தோனியாரின் திருச் சொரூபங்கள் இரண்டு, அடையாளம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் மன்னார் பகுதியிலுள்ள மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கொக்குப்படையான் கிராம மக்கள் கஜிவத்தை பகுதியில் பல வருடங்களாக காணப்பட்ட புனித அந்தோனியார் சிற்றாலயத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை ஆராதனைகளை மேற்கொள்ள சென்றிருந்தனர்.
மக்கள் மத்தியில் அதிர்வலை

இதன்போது குறித்த சிற்றாலயத்தின் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 1 மற்றும் 3 அடி உயரம் கொண்ட அந்தோனியார் திருச் சொரூபம் உடைக்கப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் சிலாவத்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக கொக்குப்படையான் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி