தேவாலயத்தில் மீட்கப்பட்ட குண்டு -அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
பொரள்ளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டொன்று மீட்கப்பட்ட சம்பவம், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கண்டி – மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களை இன்று (15) சந்தித்து, ஆசி பெற்றதை அடுத்து, ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன(Kamal kuṇaratṉa) மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் லங்கா ஹொஸ்பிட்டல் வளாகத்திலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டதாக தெரிவித்த அவர், அந்த சம்பவம் தொடர்பிலான முழுமையான தகவல்களை தாம் கண்டறிந்துகொண்டதாகவும் குறிப்பிட்டார்.
அதேபோன்று, பொரள்ளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு, சட்டத்திற்கு முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

