இலங்கையை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்
இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் 79,771 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின்படி இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,247,815 ஐத் தாண்டியுள்ளது.
அதிக எண்ணிக்கை
முதல் 13 நாட்களில், அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.
இதில் 16,329 பேர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நிலையில், இது சதவீதமாக 20.5 சதவீதமாகும்.
இரண்டாவது அதிகமாகப் பார்வையிடப்பட்ட நாடு ஐக்கிய இராச்சியம், மூன்றாவது அதிகமாகப் பார்வையிடப்பட்ட நாடு ஆஸ்திரேலியா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இந்த ஆண்டுக்கான இலங்கைக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.
இதனடிப்படையில், இந்தியாவில் இருந்து 258,323 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

