கிரேக்கத்தில் முதலீடு செய்துள்ளாரா அநுர.! வெடித்தது சர்ச்சை
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பிரதி இயக்குநர் துசித ஹல்லொலுவ, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தொடர்பில் தெரிவித்த கருத்து குறித்து விசாரணை நடத்தக் கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கிரேக்கத்தில் குறிப்பிடத்தக்க மூதலீடு ஒன்றை செய்துள்ளதாக துசித ஹல்லொலுவ அண்மையில் தெரிவித்த கருத்துக்கு எதிராக இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த முறைப்பாடானது, நேற்று (04) நள்ளிரவு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சட்டத்தரணிகளின் முறைப்பாடு
இந்த முறைப்பாட்டை சட்டத்தரணி அகலங்க உக்வத்தே மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும ஆகியோரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரதிவாதியான தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பிரதி இயக்குநர் துசித ஹல்லொலுவ, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்தில் இணைக்கப்பட்ட அதிகாரியாக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
