முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சுமார் 60,000 முறைப்பாடுகளால் நிரம்பி வழிவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான முறைப்பாடுகளை கையாள்வது திணைக்களத்திற்கு கடினமாக இருப்பதால், CID க்கு வரும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
CCIB க்கு முழு அதிகாரம்
அதன்படி, CID மீதான சுமையைக் குறைக்கும் நடவடிக்கையில், சில முறைப்பாடுகள் காவல்துறை மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் புதிதாக நிறுவப்பட்ட மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) பரிந்துரைக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
அத்துடன், எந்தவொரு விசாரணை அல்லது சோதனையையும் நடத்த CCIB க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
CCIB தலைமை அலுவலகத்தின் திறப்பு விழாவிற்கு பிறகு நேற்று(04) ஊடகங்களுக்குத் கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டில் திறமையான விசாரணை செயல்முறையை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும், CCIB குறுகிய காலத்தில் அதற்கு வரும் முறைப்பாடுகளை விசாரிக்கும் என்றும் கூறியுள்ளார்.
நேரடி முறைப்பாடு
இதேவேளை, காவல் துறையில் ஏராளமான கட்டமைப்பு மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும், குற்றப் புலனாய்வு பணியகத்தை நிறுவுவது அத்தகைய மாற்றங்களில் ஒன்றாகும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், CID-யில் நிலுவையில் உள்ள முறைப்பாடுகள் CCIB-க்கு பரிந்துரைக்கப்படுமா என்று கேட்டபோது, IGP முடிவு செய்தால், சில முறைப்பாடுகள் CCIB-க்கு பரிந்துரைக்கப்படும் என்றும், மக்கள் இப்போது நேரடியாக CCIB-க்கு முறைப்பாடு அளிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், காவல் துறையில் 2,8000 காவல்துறையினர் பற்றாக்குறை உள்ளது, மேலும் இந்த ஆண்டு 5,000 காவல்துறையினரையும் அடுத்த ஆண்டு மேலும் 5,000 காவல்துறையினரையும் நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா
