சர்ச்சைக்குரிய போலி தலதா மாளிகை - முகப்பு பகுதியை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்
CID - Sri Lanka Police
Kurunegala
Mervyn Silva
By Dharu
குருநாகல் பொத்துஹெரவில் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் போலி தலதா மாளிகையின் முகப்பு பகுதி அகற்றும் பணி இன்று (08) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் பராமரிப்பாளர்களால் இன்று காலை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த போலி தலதா மாளிகை தொடர்பில் சர்ச்சைக்குரிய சூழ்நிலை உருவாகியிருந்ததுடன், இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு அஸ்கிரி மல்வத்து மகாநாயக்க தேரர்கள் உட்பட பல தரப்பினரும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
முகப்பு பகுதியை அகற்றல்
குறித்த இடத்திற்கு நேற்று விஜயம் செய்த முன்னாள் அமைச்சர் மார்வின் சில்வா, தலதா மாளிகையின் முகப்பு பகுதியை அகற்றுமாறு அதன் ஸ்தாபகரான ஜனக சேனாதிபதிக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்