காவல்துறை பெயரில் போலி ஆவணம்: தீவிர விசாரணையில் சிஐடி
பிரதி காவல்துறை மா அதிபரின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பட்ட ஆவணம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
PDF கோப்பாக விநியோகிக்கப்பட்ட இந்த ஆவணம், காவல்துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கை போல போலியாக உருவாக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை
இந்த ஆவணம் கீழ்க்காணும் அனுமதியில்லாத மின்னஞ்சல் முகவரிகள் வழியாக பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது:
- judicial.gov-srilanka@execs.com
- polcermp@gmail.com
- andrep.atricia885@gmail.com
- ecowastaxs@gmail.com
- ccybermp@gmail.com
- vinicarvalh08@hotmail.com
இந்த நிலையில், குறித்த மின்னஞ்சல் முகவரிகளில் எதுவும் இலங்கை காவல்துறை அல்லது அரசாங்கத்துடன் தொடர்புடையதல்ல என்பதை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், போலி ஆவணத்தை உருவாக்கிய மற்றும் பரப்பிய நபர் அல்லது குழுவை அடையாளம் காணும் பணியில் சிஐடி ஈடுபட்டுள்ளது.
இதேவேளை, இணையம் வழியாக பரவும் அதிகாரப்பூர்வமற்ற அல்லது சந்தேகத்திற்கிடமான தகவல்களை நம்ப வேண்டாம் காவல்துறை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
