உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சர்ச்சை: தீவிரமடையும் விசாரணைகள்
கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக எதிர்வரும் 19 ஆம் திகதி சிறில் காமினியை, அந்த திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை தான் அறிந்திருப்பதாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் விசாரணைகளுக்காக முன்னிலையாகியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
விசாரணை
இந்த தாக்குதல் தொடர்பான சில உண்மைகளை தான் அறிந்திருப்பதாக கருதி, திணைக்களம் குறித்த அழைப்பை விடுத்துள்ளதாக சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்கனவே சிறில் காமினி விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தார்.
அத்துடன், தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையிலான நீதிமன்ற தடை உத்தரவொன்றையும் அவர் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |