மத்திய வங்கி தடை விதித்த பிரமிட் நிதித் திட்டம் குறித்த நீதிமன்றத்தின் உத்தரவு

Dilakshan
in சட்டம் மற்றும் ஒழுங்குReport this article
வறுமை ஒழிப்புத் திட்டங்கள் என்ற போர்வையில் அரசாங்க நிதியை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பீகாயின் (Beecoin) எனப்படும் சட்டவிரோத பிரமிட் நிதித் திட்டத்தை இலங்கை மத்திய வங்கி (CBSL) எப்போது அதிகாரப்பூர்வமாக தடை செய்தது என்பது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வழக்கு விசாரணையின் போது, சந்தேக நபர்கள் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர் துமேஷ் காரியவசம், அவர்கள் கைது செய்யப்பட்ட நேரத்தில், பீகாயின் இன்னும் மத்திய வங்கியால் சட்டவிரோத நிறுவனமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய வங்கியின் தடை
அத்தோடு, சந்தேக நபர்கள் ஒக்டோபர் 24, 2024 அன்று கைது செய்யப்பட்ட போதிலும், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஜனவரி 20, 2025 அன்று செய்தித்தாள் அறிவிப்புகள் மூலம் மட்டுமே மத்திய வங்கி தனது தடையை பிறப்பித்ததாகவும் அவர் வாதிட்டுள்ளார்.
இதன்போது, பிணையில் விடுக்கப்பட்டிருந்த ஹரிச்சந்திர டி சில்வா, தயாரத்ன வாலிசுந்தர மற்றும் தேஷான் இரேஷ் சில்வா ஆகிய மூன்று சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.
உத்தரவு
கைது செய்யப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகுதான் மத்திய வங்கி குறித்த நிறுவனத்தை சட்டவிரோதமானது என்று அறிவித்ததால், பிரதிவாதிகளுக்கும் அவர்களது வாடிக்கையாளர்களுக்கும் பீகாயின் இன் சட்டவிரோத நிலை குறித்து எந்த முன் அறிவும் இல்லை என்று அவர்களின் வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.
அதன்படி, முன்மொழிவுகளை பரிசீலித்த பிறகு, பீகாயின் நிறுவனமும் அதனுடன் தொடர்புடைய மென்பொருளும் அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்ட சரியான திகதியை உறுதிப்படுத்தும் அறிக்கையை வழங்குமாறு தலைமை நீதிபதி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
