மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 6 பேர் கைது...!
மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (27-02-2026) இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை, வவுணதீவு, காத்தான்குடி மற்றும் கல்குடா காவல் நிலையப் பிரிவுகளில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
மேலும் தெரியவருகையில், குறித்த காவல் நிலையங்களின் காவல்துறையினருக்குக் கிடைத்த தகவல்களையடுத்து, வவுணதீவு காவல்துறையினர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவரை 365 லீற்றர் கசிப்புடன் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, வாழைச்சேனை காவல்துறையினர், 5 லீற்றர் கசிப்புடன் இருவரைத் கைது செய்துள்ளனர்.

அவ்வாறே காத்தான்குடி காவல் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை 30 லீற்றர் கசிப்புடன் காவல்துறையினர் கைது செய்ததுடன், கல்குடா காவல் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 5 லீற்றர் கசிப்புடன் ஒருவரைத் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தந்தக் காவல் நிலைய காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |