கறுவாவின் விலையில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி : கலக்கத்தில் செய்கையாளர்கள்!
Hambantota
Sri Lanka
Economy of Sri Lanka
By Kathirpriya
இலங்கை சந்தையில் கறுவாவின் விலை குறைவடைந்துள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை சந்தையில் கிடைக்கின்ற கறுவாவில் அல்பா கறுவாப் பட்டை உயர் தரம் மிக்க கருவாவாகும், இதற்கு அதிக கிராக்கி நிலவி வருகின்றது.
ஒரு கிலோகிராம் அல்பா கறுவா 4,800 ரூபா முதல் 5,000 ரூபா வரையில் விற்பனைசெய்யப்பட்ட நிலையில் தற்போது சந்தையில் 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிரதான வாழ்வாதாரமாக
கறுவா விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாகவே கறுவாவின் விலை குறைந்துள்ளதாகவும், கறுவாச் செய்கையை பிரதான வாழ்வாதாரமாக கொண்ட மக்கள் பெரும் அசௌகரியத்துக்குள்ளாகியுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கட்டுவன மற்றும் வலஸ்முல்ல பிரதேச மக்களின் பிரதான வாழ்வாதாரமாக கறுவா செய்கை விளங்குவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்