சர்வதேசத்தை ஏமாற்றும் ரணில் அரசு! சாணக்கியன் பகிரங்க குற்றச்சாட்டு

Ranil Wickremesinghe Shanakiyan Rasamanickam Sri Lanka Sri Lankan political crisis
By Pavan Dec 06, 2023 10:03 AM GMT
Report

இலங்கை அரசு சர்வதேசத்தை ஏமாற்றிவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைமுறையிலுள்ள மிகவும் சர்சைக்குரிய சட்டங்களில் ஒன்றான பயங்கரவாத தடைச்சட்டத்தின் காரணமாக இலங்கை பல வருடங்களாக சர்வதேசத்தில் மிகவும் கவனம் பெற்ற நாடாக காணப்படுகின்றது.

இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சி செய்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையான காரணங்களின்றி முஸ்லிம்களையும், தமிழர்களையும் தடுத்து வைப்பதற்கும், போலியான குற்ற ஒப்புதல்களைப் பெறுவதற்கும் இந்தப் பயங்கரமான சட்டத்தினைப் பயன்படுத்தி வருகின்றன.

அரச வேலைவாய்ப்புக்கு காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல்! வெளியான அறிவிப்பு

அரச வேலைவாய்ப்புக்கு காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல்! வெளியான அறிவிப்பு

ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது

குறிப்பாக 2022 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட சிங்கள இளைஞர்கள் இப்பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர்.

சர்வதேசத்தை ஏமாற்றும் ரணில் அரசு! சாணக்கியன் பகிரங்க குற்றச்சாட்டு | Sri Lankan Is Deceiving International Community

இதனையடுத்து பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் எனக் கோரி 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நாடு தழுவிய கையொப்ப பிரச்சாரத்திற்கு நானும், எம் ஏ சுமந்திரனும் தலைமை தாங்கினோம்.

இப் பிரச்சாரத்திற்கு நாடு முழுவதும் இருந்து பிரசைகளும் செயற்பாட்டாளர்களும் எஸ்எல்பிபி தவிர்ந்த சகல அரசியல் கட்சிகளும் ஆதரவு வழங்கிருந்தன.

ஒத்தி வைக்கப்படவுள்ள நாடாளுமன்றம்: ரணில் எடுத்த தீர்மானம்

ஒத்தி வைக்கப்படவுள்ள நாடாளுமன்றம்: ரணில் எடுத்த தீர்மானம்

மாவீரர் நினைவேந்தல்

கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் அபிவிருத்தி குறித்து கவலையடைவதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான நடைமுறைத் தடை குறித்து சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசாங்கம் உத்தரவாதம் வழங்கியுள்ளதாகவும் பகிரங்கமாகக் கூறியது.

ஆனால் அதனை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தியதா?

சர்வதேசத்தை ஏமாற்றும் ரணில் அரசு! சாணக்கியன் பகிரங்க குற்றச்சாட்டு | Sri Lankan Is Deceiving International Community

இதுபோன்ற உறுதிமொழிகள் வெளிப்படையாக இருந்தும். கடந்த மாதம் நினைவேந்தல் தின நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஒன்பது பேரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

எனவே நாட்டிற்குள் நல்லிணக்கம், மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பற்றிப் பேசி சர்வதேச சமூகத்தையும் மனித உரிமைகள் பேரவையையும் தவறாக வழிநடத்த அரசாங்கம் முயல்கிறதா? இவ்வாறு சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 
ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007