அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட புதிய தீர்மானம் - சுற்றறிக்கை வெளியீடு
இரண்டாம் இணைப்பு
அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக குறைக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான சுற்றறிக்கை இன்று (14) வெளியாகும் என அறிவிக்கப்பபட்ட நிலையில் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆகக் குறைக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் சுற்றறிக்கை இன்று (14) வெளியிடப்படவுள்ளது.
இதனை பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு இணங்க இந்த சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.
அத்தியாவசிய சேவை ஊழியர்கள்
இதன்படி, அரச ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆகக் குறையும் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், குறிப்பிட்ட சில அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.


