அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்தவர்களின் பிராஜாவுரிமை : வெளியான தகவல்
அமெரிக்காவிலிருந்து (America) கனடாவில் (Canada) குடிபெயர்ந்தவர்கள், தங்களது அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்து செய்ய அதிக நாட்டம் காட்டுவதாகத் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக குடியேற்ற சட்டத்தரணிகள் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், கடந்த சில மாதங்களில் இதற்கான விண்ணப்பங்கள் 50% உயர்வு கண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பிரஜாவுரிமை
அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்து செய்ய முயற்சி செய்யும் பலர், அமெரிக்காவின் தற்போதைய நிலைக்கு வெட்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் வாழ்வது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காட்டப்படுவது போல இல்லையென்று சிலர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க தேர்தல்
அத்தோடு, 2025 அமெரிக்க தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மீண்டும் வெற்றி பெற்று கனடா மீது வரிகள் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டமை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
மேலும், எவ்வாறெனினும் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்வது நீண்ட செயல்முறை என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 2 நாட்கள் முன்
