போப் பிரான்சிஸ் உடல் நிலை தேறுமா? பகீர் கிளப்பும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்புகள்!
போப்பின் மரணத்தையும், வாட்டிகனின் வீழ்ச்சியையும் நாஸ்ட்ராடாமஸ் (Nostradamus) கணித்துள்ளாரா? மற்றும் அவர் கணித்தது என்ன என்று இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
லண்டனின் பெரும் தீ விபத்து மற்றும் ஹிட்லரின் அதிகார எழுச்சி, கோவிட்-19 தொற்றுநோய் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க உலக நிகழ்வுகளை நாஸ்ட்ராடாமஸ் முன்பே கணித்ததாக சிலர் நம்புகிறார்கள்.
போப் பிரான்சிஸின் உடல்நிலை குறித்து வாட்டிகனின் அறிவிப்பு, போப்பின் மறைவை முன்னறிவித்ததாகக் கூறப்படும் நாஸ்ட்ராடாமஸின் கணிப்புகளை நிபுணர்கள் மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது.
நாஸ்ட்ராடாமஸ்
1555ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அவரது புகழ்பெற்ற புத்தகமான "லெஸ் ப்ராபெட்டீஸ்"-ல், போர்கள், இயற்கை பேரழிவுகள், அரசியல் எழுச்சிகள் மற்றும் படுகொலைகள் பற்றி நாஸ்ட்ராடாமஸ் உலகிற்கு ஏராளமான கணிப்புகளை வழங்கியதாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, போப் பிரான்சிஸின் உடல்நிலையைச் சுற்றி கவனத்தை ஈர்த்த அவரது சமீபத்திய ரகசிய தீர்க்கதரிசனங்கள், நியூயார்க் போஸ்ட் அறிக்கையின் படி, ஒரு வயதான போப்பாண்டவரின் மரணத்தை அவர் கணிக்கும் ஒரு பகுதியை பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
"மிகவும் வயதான ஒரு போப்பாண்டவரின் மரணத்தின் மூலம், நல்ல வயதுடைய ஒரு ரோமானியப் பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்படுவார்" என்று நாஸ்ட்ராடாம் கூறியுள்ளார்.
போப் பிரான்சிஸ்
இந்த பகுதி போப் பிரான்சிஸின் ஆபத்தான நிலை மற்றும் போப்பாண்டவர் பதவியில் மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய கோட்பாடுகளைத் தூண்டியுள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
88 வயதான போப் பிரான்சிஸ் மூச்சுக்குழாய், வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை ஆகிய தொற்றால் முதலில் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்த மருத்துவர்கள், பின்னர் இரண்டு நுரையீரல்களும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தனர். இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
