பூமியை தாக்கவிருக்கும் குறுங்கோள் : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
பூமியை கண்டிப்பாக தாக்கும் என நாசா (NASA) அஞ்சும் City-killing குறுங்கோள் தொடர்பில் முன்னாள் விண்வெளி வீரர் ஒருவர் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயத்தை ஓய்வுபெற்ற கனேடிய விண்வெளி வீரர் கிறிஸ் ஹாட்ஃபீல்ட் என்பவரே வெளியிட்டுள்ளார்.
இதனடிப்படையில் வெளியான அறிக்கையில், 2024 YR4 குறுங்கோளானது 2032 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் திகதி பூமியை தாக்கவிருக்கிறது.
சதவிகித வாய்ப்பு
ஆனால், பூமியை நேரிடையாக தாக்குவதற்கு 2.3 சதவிகித வாய்ப்புகளே இருப்பதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய மதிப்பீடுகளின்படி, அதன் அளவு 130 முதல் 300 அடி அகலம் அல்லது அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையின் உயரத்திற்குச் சமம் என்றே குறிப்பிடுகின்றனர்.
இந்த குறுங்கோள் பூமியை தாக்கும் என்றால் அது 7.7 மெகாடன் TNT வெடிப்பதற்குச் சமமான தாக்கத்தை உருவாக்கும் என்றும் பூமியில் 3,000 அடி அகலமுள்ள பள்ளத்தை ஏற்படுத்தும் என்றும் ஹாட்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.
அதாவது, இது இரண்டாம் உலகப் போரின் போது வெடித்த மிகப்பெரிய குண்டை விட சுமார் 500 மடங்கு சக்தி வாய்ந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் நாம் ஒருவருக்கொருவர் ஏற்படுத்திய அழிவைப் பற்றி யோசித்துப் பாருங்கள், இது அதை விட 500 மடங்கு சக்தி வாய்ந்தது.
நாசாவால் நிதியுதவி
நாசாவால் நிதியுதவி அளிக்கப்படும் அமைப்பு ஒன்று கடந்த டிசம்பர் மாதம் இந்த குறுங்கோளை அடையாளம் கண்டது.
பூமியிலிருந்து சுமார் 27 மில்லியன் மைல்கள் தொலைவில் முதலில் அதை அடையாளம் கண்டுள்ளனர்.
நாசா உடனடியாக அச்சுறுத்தல் மிகுந்த குறுங்கோள்கள் பட்டியலில் 2024 YR4 குறுங்கோளை சேர்த்தது.
அத்தோடு, பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த பிறகு அது உடைந்து போகாமல் பூமியின் மேற்பரப்பில் ஒரே துண்டாக மோதும் என்ற அச்சத்தை நாசா பதிவு செய்தது.
இந்த மோதலால் ஏற்படக் கூடிய வெடிப்பு, வினாடிக்கு பத்து மைல்களுக்கு மேல் வேகத்தில் பாறைத் துண்டுகளை வெளியே அனுப்பும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
