தங்கச்சுரங்கத்தில் ஏற்பட்ட கொடூரம் : பலியான 48 பெண்கள்
மேற்கு ஆபிரிக்க (West Africa) நாடான மாலியில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில், பெண்கள் 48 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் கென்யா மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்க சுரங்கத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்த சுரங்கம் திடீரென இடிந்து விழுந்து நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்துள்ளனர்.
மீட்பு படையினர்
உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கி, பெண்கள் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
பத்து பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக காணப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்பு பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
