சிவில் வழக்குகள் நடைமுறைச் சட்டத் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
சிவில் வழக்குகள் நடைமுறைச் சட்டத்தின் (திருத்தம்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று (03) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பான இன்னும் சில விடயங்களை தெரிவித்துள்ளார்.
அம்பியூலன்ஸ் வாகனத் தட்டுப்பாடு
அவர் மேலும் தெரிவித்ததாவது, எதிர்வரும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் நிலவும் அம்பியூலன்ஸ் வாகனத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வு காண அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

நாட்டில் நிலவும் அம்பியூலன்ஸ் வாகனங்களுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) கடனுதவியின் கீழ் இலங்கைக்கு 47 புதிய அம்பியூலன்ஸ் வாகனங்கள் கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் மேலும் அம்பியூலன்ஸ் வாகனங்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ளதைப் போன்ற சுயாதீன அம்பியூலன்ஸ் சேவை முறையை நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்துவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நுவரெலியா மாவட்டத்தில் இயங்கும் அம்பியூலன்ஸ் சேவை சுகாதாரத் துறையிலிருந்து சுயாதீனமாகச் செயற்படுவதாகவும், இந்த முறையை எதிர்காலத்தில் நாடு முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் தற்போதுள்ள குறைபாடுகளைக் களைந்து நாடளாவிய ரீதியில் அம்பியூலன்ஸ் சேவையை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |