காதலர் தினக் கொண்டாட்டம் - ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் மோதல்!
காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வின் போது மாணவர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் மற்றும் முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு இடையே குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மாணவர்கள் சிலர் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோதலில் மாணவர்கள்
சம்பவத்தை அறிந்த காவல்துறையினர், அங்கு விஜயம் செய்து மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினைகளை கட்டுப்படுத்தி, மாணவர்களை விடுதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மீண்டும் விடுதியில் இருந்து வெளியே வந்த மாணவர்கள் கலைப் பீடத்திற்கு முன்பாக தடிகளுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, காயமடைந்த மாணவர் ஒருவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்த சில மாணவர்கள் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
மோதலில் கலைப்பீடத்தில் உள்ள கட்டடத்தின் கண்ணாடிகள் மற்றும் நுழைவாயில் என்பவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
