யாழில் இரு குழுக்களுக்கிடையே மோதல் : அதிகாலையிலே வாகனங்கள் தீக்கிரை
Sri Lanka Police
Sinhala and Tamil New Year
Jaffna
Sri Lanka Police Investigation
By Kathirpriya
யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று (15) அதிகாலை 12.30க்கும் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட இந்த தகராறில் பட்டா ரக வாகனம் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற முறுகல் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி