மருத்துவப் பல்கலையில் மாணவ குழுக்களுக்கிடையில் மோதல்...! கல்வி அமைச்சின் அதிரடி நடவடிக்கை
கம்பஹா விக்கிரமாரச்சி சுதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கிடையே இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதல் சம்பவம் தொடர்பில், பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளக விசாரணையை ஆரம்பித்துள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் குறித்த சம்பவம் தொடர்பாக யக்கல காவல் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் இரண்டாம் ஆண்டுக்குத் தகுதி பெற்ற பின்னர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவே இந்த மோதலுக்குக் காரணமாக அமைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிர்வாகத்தின் உள்ளக விசாரணை
கடந்த 2ஆம் திகதி பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலைக்கு அருகில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய இரு தரப்பினரையும் எதிர்வரும் சனிக்கிழமை யக்கல காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் உள்ளக விசாரணையும் காவல்துறை விசாரணையும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |