மட்டக்களப்பில் கரிநாள் பேரணியை தடுத்து நிறுத்திய காவல்துறையினருடன் முறுகல்

Sri Lanka Police Tamils Batticaloa Protest
By Bavan Feb 04, 2026 11:26 AM GMT
Report

மட்டக்களப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்காவரை இன்று (4) முன்னெடுக்கப்பட்ட கரிநாள் எதிர்ப்பு ஆர்ப்பாட பேரணியை கோட்டமுனை பாலத்தில் வைத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் ஏற்பட்ட நிலையில் அங்கு வீதியில் அமர்ந்திருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் காணாமல் போன உறுவுகள் சங்கம் பொது அமைப்புக்கள் கரிநாள் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

சிறிலங்கா சுதந்திரதினம் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இனவழிப்பு துவங்கப்பட்ட நாள்!

சிறிலங்கா சுதந்திரதினம் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இனவழிப்பு துவங்கப்பட்ட நாள்!

தமிழர்களின் கரிநாள்

இதனையடுத்து மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இன்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் காணாமல் போண உறவுகள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றிணைந்தனர்.

மட்டக்களப்பில் கரிநாள் பேரணியை தடுத்து நிறுத்திய காவல்துறையினருடன் முறுகல் | Clashes With Police Who Blocked A Rally In Batti

இதனைத் தொடர்ந்து சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழர்களின் கரிநாள், தமிழர்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரி எனும் தொனிப் பொருளில் காணாமல் போன உறவுகளுக்கு நீதி வேண்டும், வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம், எமது மண் எமக்கு வேண்டும், போன்ற அரசுக்கு எதிரான சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்ட ஊர்வலமாக காந்தி பூங்காவை நோக்கிச் சென்றனர்.

இதனையடுத்து மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள முக்கிய சந்திகளில் காவல்துறையினர் மற்றும் கலகம் அடக்கும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட வந்தனர்.

GovPay செயலி மூலம் அபராதம் செலுத்திய 46,000 சாரதிகள்

GovPay செயலி மூலம் அபராதம் செலுத்திய 46,000 சாரதிகள்

தடுத்து நிறுத்திய காவல்துறையினர்

இந்த நிலையில் கோட்டமுனை பாலத்தில் வைத்து ஆர்ப்பாட்டகாரர்களை காந்தி பூங்காவிற்கு செல்ல முடியாது அங்கு 78வது சுதந்திர தின நிகழ்வு ஒன்று இடம்பெற்று வருகின்றது எனவே அங்கு இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றது எனவே அங்கு செல்ல முடியாது நீங்கள் பிரதான பேருந்து தரிப்பு நிலையம் சென்று ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளுமாறு  காவல்துறையினர் தெரிவித்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

மட்டக்களப்பில் கரிநாள் பேரணியை தடுத்து நிறுத்திய காவல்துறையினருடன் முறுகல் | Clashes With Police Who Blocked A Rally In Batti

இதனையடுத்து ஆர்ப்பாட்டக்கார்கள் எங்களுக்கு சுதந்திரம் இருக்கின்றது இந்த வீதியால் சென்று காந்தி பூங்கா முன்னாள் உள்ள மணிக்கூட்டுக் கோபுரம் சென்று அங்கிருந்து பிரதான பேருந்து நிலைய பகுதிக்கு செல்ல வழிவிடுமாறு காவல்துறையினரின் தடுப்பை மீறி செல்ல முற்பட்டதையடுத்து  காவல்துறையினருக்கும் ஆர்பாட்டகார்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

பின்னர் கலகம் அடக்கும் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டகாரர்களை தடுத்து நிறுத்தியதையடுத்து அவர்கள் அங்கு வீதியில் அமர்ந்திருந்து; பகல்12.00 மணிவரையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

பல்கலை அனுமதிக்கு நாமல் வழங்கிய சிபாரிசு கடிதம்! சபையில் போட்டுடைத்த பிமல்

பல்கலை அனுமதிக்கு நாமல் வழங்கிய சிபாரிசு கடிதம்! சபையில் போட்டுடைத்த பிமல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

08 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், தாவடி, பரிஸ், France

08 Feb, 2020
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026