நாடளாவிய ரீதியில் ஆரம்பமான “க்ளீன் சிறீலங்கா” தேசிய வேலைத்திட்டம்

Trincomalee Anura Dissanayake Sri Lanka
By Raghav Jan 01, 2025 09:56 AM GMT
Report

புதிய இணைப்பு

யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட செயலகத்தின் 2025ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வும் "க்ளீன் சிறீலங்கா" பிரஜைகள் சத்தியப் பிரமாணம் எடுத்தல் நிகழ்வும் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (2025.01.01) காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலகம் முன்றலில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்களினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 02 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உத்தியோகத்தர்களினால் "க்ளீன் சிறீலங்கா" பிரஜைகள் சத்தியப் பிரமாண உறுதிமொழி எடுக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் ஆரம்பமான “க்ளீன் சிறீலங்கா” தேசிய வேலைத்திட்டம் | Clean Sri Lanka National Program Begins Today

மட்டக்களப்பு மாவட்ட செயலகம்

க்ளீன சிறீலங்கா வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய ஐஸ்டினா முரளிதரன் தலைமையில் நிகழ்வு இன்று (01.01.2025) இடம்பெற்றது.

இதன் முதன் நிகழ்வாக தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதனைத் தொடர்ந்து இந்த நிகழ்வின் பிரதான நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உத்தியோகத்தர்களினால் க்ளீன் சிறீலங்கா சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் மற்றும் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் காணி எஸ்.நபரூப ரஞ்சனி மற்றும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், ஊழியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நாடளாவிய ரீதியில் ஆரம்பமான “க்ளீன் சிறீலங்கா” தேசிய வேலைத்திட்டம் | Clean Sri Lanka National Program Begins Today

காரைதீவு

புதிய ஆண்டின் (2025) அரசாங்க சேவை சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று 2025.01.01 காலை 9.00 மணிக்கு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்தியர் தஸ்லீமா வசீர் தலைமையில் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்களுக்கும் ஏனையவர்களுக்குமாக 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கொண்டனர்

நாடளாவிய ரீதியில் ஆரம்பமான “க்ளீன் சிறீலங்கா” தேசிய வேலைத்திட்டம் | Clean Sri Lanka National Program Begins Today

வவுனியா மாவட்ட செயலகம்

தேசிய ரீதியில் இவ்வாண்டு முதலாம் திகதி முதல் க்ளீன் சிறீலங்கா வேலைத்திடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக, வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் க்ளீன் சிறீலங்கா வேலைத்திட்டத்திற்கான உறுதியுரையினை எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தேசியக் கொடியினை ஏற்றி வைத்ததுடன், மதத்தலைவர்களிம் ஆசியுரைகளும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட க்ளீன் சிறீலங்கா வேலைத்திட்டத்திற்கான உறுதியுரை அரச உத்தியோகத்தர்கள் எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர், திணைக்கள தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நாடளாவிய ரீதியில் ஆரம்பமான “க்ளீன் சிறீலங்கா” தேசிய வேலைத்திட்டம் | Clean Sri Lanka National Program Begins Today

சம்மாந்துறை

 2025 ஆம் வருடத்திற்கான அரச கடமைகளை ஆரம்பித்தல், சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று(01) காலை 8.30 மணிக்கு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.

மேலும் இந் நிகழ்வில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்களுக்கும், ஏனையவர்களுக்குமாக 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்மாதிரியாக செயற்படல், ஊக்கமளித்தல், ஈடுபடுத்தல் மற்றும் மாற்றமுறும் தேவைகளைப் பலமுள்ளதாக உறுதிப்படுத்துவதினூடாக சமூகமொன்றின் நடத்தைமுறையிலான மாற்றங்களை ஏற்படுத்தும் பலமான அணுகுமுறையொன்றை அடையக்கூடியதாக இருக்கும்.

நாடளாவிய ரீதியில் ஆரம்பமான “க்ளீன் சிறீலங்கா” தேசிய வேலைத்திட்டம் | Clean Sri Lanka National Program Begins Today

இதன் மூலம் ஒரு நாட்டின் சமூக, பொருளாதார கலாசார நெறிமுறையிலான மற்றும் சுற்றாடல் ரீதியாக முன்னோக்கிச் செல்லும் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல் வேண்டும்.

இதற்காக நாட்டை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களும் அரச ஊழியர்களும் நாட்டு மக்களும் ஒன்றாக ஒன்றிணைந்து ஒரே நோக்கத்துடன் ஒரே திசையை நோக்கிச் செயற்படுதல் வேண்டும்”என்ற நோக்கத்தினை மையப்படுத்தி இன்றைய கடமை ஆரம்ப நாள் அமையப் பெறும்.

இந் நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், தலைமைப்பீட முகாமையாளர், மேலதிக மாவட்ட பதிவாளர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கொண்டனர்.

நாடளாவிய ரீதியில் ஆரம்பமான “க்ளீன் சிறீலங்கா” தேசிய வேலைத்திட்டம் | Clean Sri Lanka National Program Begins Today

மன்னார் மாவட்ட செயலகம் 

2025 ஆம் ஆண்டுக்கான கடமைகளை வைபவ ரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வானது இன்று (2025 -01-01) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக காலை 8.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபரால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்ட பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உத்தியோகத்தர்கள் அனைவரும் ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

நாடளாவிய ரீதியில் ஆரம்பமான “க்ளீன் சிறீலங்கா” தேசிய வேலைத்திட்டம் | Clean Sri Lanka National Program Begins Today

சாய்ந்தமருது

"கிளீன் சிறீலங்கா பிரஜைகள்" பிரமாண முதல் நாள் கடமை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று 2025.01.01 சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஜே.மதன் தலைமையில் நடைபெற்ற இந்த முதல் நாள் கடமை ஆரம்ப நிகழ்வில் அனைத்து உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

சுகாதார வைத்திய அதிகாரியினால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன், " கிளீன் சிறீலங்கா பிரஜைகள் " சத்தியப்பிரமாண உறுதிமொழி எடுக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் ஆரம்பமான “க்ளீன் சிறீலங்கா” தேசிய வேலைத்திட்டம் | Clean Sri Lanka National Program Begins Today

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம்

புதுவருட பிறப்பினை முன்னிட்டு அரச கருமங்களை உத்தியோக பூர்வமாக அரம்பிக்கும் நிகழ்வானது இன்று (01) காலை கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

ஆளுநரது செயலாலர் ஜே.எஸ் அருள்ராஜ் தேசியக்கொடியினை ஏற்றிவைத்து குறித்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக "தூய்மையான இலங்கை" இலங்கைக்கு ஒரு புதிய ஆரம்பம் எனும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக அரச கடமைகளை கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் அரச அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.

நாடளாவிய ரீதியில் ஆரம்பமான “க்ளீன் சிறீலங்கா” தேசிய வேலைத்திட்டம் | Clean Sri Lanka National Program Begins Today

தம்பலகாமம் பிரதேச செயலகம்

2025ம் ஆண்டின் முதலாம் நாளான இன்று (2025.01.01) அரச திணைக்களங்களின் சத்தியப்பிரமாண நிகழ்வுகளுடன் கடமைகள் ஆரம்பிக்கப்பட்டன.

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சகல உத்தியோகத்தர்களும் இணைந்து உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர்.

குறித்த உறுதி மொழியின் போதான எதிர்பார்ப்பாக "நாடு என்ற ரீதியில் நாங்கள் தவறவிட்ட சகவாழ்வு சமூக பொருளாதார அபிவிருத்தி நவீனத்துவம் மற்றும் கலாசார வாழ்வு என்பவற்றை மீண்டும் அடைவதே எமது எதிர்பார்ப்பாகும்.

க்ளீன் சிறீலங்கா என்பது வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கு அத்தியாவசியமான கூட்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றும் அத்துடன் பொறுப்புக் கூறும் தொழிற்பாடாகும்.

இன மத அல்லது அரசியல் பேதமின்றி இத்தேசிய நிகழ்ச்சி திட்டத்துடன் இணைந்து செயற்படுவதற்கு உறுதி மொழி அளிக்கின்றோம்.“ என்பது அமைந்திருந்துது.

மூதூர் பிரதேச சபை

“க்ளீன் சிறீலங்கா“ தேசிய நிகழ்ச்சி திட்டத்துடன் இணைந்ததாக அரச ஊழியர்களின் 2025 புதிய வருடத்திற்கான சத்தியப்பிரமாணம் மூதூர் பிரதேச சபையில் இடம்பெற்றது.

இன்று (01) காலை 9.00 மணிக்கு மூதூர் பிரதேச சபையில் பிரதேச சபையின் செயலாளர் வீ.சத்தியசோதி தலைமையில் நடைபெற்றது.

இதன் போது மூதூர் பிரதேச சபையில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் 2025 புதிய ஆண்டுக்கான சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.

முதலாம் இணைப்பு 

புதிய வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கவுள்ள முதல் நாளான இன்று (01.01.2025) அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறவுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளரின் ஊடாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு, அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டவாக்க பேரவை தலைவர்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய வருடத்தில் “க்ளீன் சிறீலங்கா” (தூய்மையான இலங்கை) தேசிய வேலைத்திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச துறை மற்றும் தனியார் துறையினரால் முன்னெடுக்கப்படும் “க்ளீன் சிறீலங்கா” (தூய்மையான இலங்கை) வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) தலைமையில் இன்று (01.01.2025) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கையின் அரச தரவுப் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் : எச்சரிக்கும் அமைச்சர்

இலங்கையின் அரச தரவுப் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் : எச்சரிக்கும் அமைச்சர்

2025 வரவு செலவுத் திட்டத்தின் முதல் வாசிப்பு: வேகமெடுக்கும் அநுர அரசு

2025 வரவு செலவுத் திட்டத்தின் முதல் வாசிப்பு: வேகமெடுக்கும் அநுர அரசு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உயரப்புலம், மாங்குளம், தோணிக்கல்

08 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

South Harrow, United Kingdom, Woodstock, United Kingdom

29 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், நீர்கொழும்பு

27 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வசாவிளான், Jaffna, குப்பிளான்

21 Jul, 2015
கண்ணீர் அஞ்சலி

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, வெள்ளவத்தை

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆலங்குளாய், சங்கானை, யாழ்ப்பாணம், Dammam, Saudi Arabia, Rheine, Germany, Rushden, United Kingdom

29 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், கொழும்பு 6

27 Jul, 2025
மரண அறிவித்தல்

கல்முனை, Montreal, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

28 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005