ஈரானில் போர்முனையின் நடுவே சிக்கித் தவிக்கும் 600 தமிழக கடற்றொழிலாளர்கள்!
இஸ்ரேல் - ஈரான் இடையிலான நேரடி மோதல் மத்திய கிழக்கில் ஒரு பெரும் போராக உருவெடுத்துள்ள நிலையில், அண்டை நாடுகளும் இந்த யுத்தத் தீயால் சூழப்பட்டுள்ளன.
இந்தநிலையில், வாழ்வாதாரம் தேடி ஈரான் சென்ற சுமார் 600-க்கும் மேற்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள், தற்போது போர்முனையின் நடுவே சிக்கித் தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் குண்டுகள் மழை எனப் பொழிந்து வருவதால், எப்போது என்ன நடக்கும் என்ற அச்சத்தில், உணவு மற்றும் குடிநீரின்றி அவர்கள் முடங்கியுள்ளனர்.
தமிழகக் கடற்றொழிலாளர்கள் உருக்கமாக விடுத்துள்ள கோரிக்கை, பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு, போர்ச் சூழலில் சிக்கியுள்ள இந்தத் தமிழக உறவுகளைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வர வேண்டும் என்பது இங்கு பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |