ஊடக அழுத்தத்தால் கவனிப்பாரற்றிருந்த நிலாவரை கிணறு தூய்மிப்பு!

Sri Lankan Tamils Sri Lanka Department of Archaeology
By Theepan Jan 08, 2026 06:20 AM GMT
Report

நிலாவரை ஆழமற்ற கிணற்றுப் பகுதி மிகவும் தூய்மையற்றதாகக் காணப்படுவதாக ஊடகங்களில் வெளியாகிய விமர்சனத்தைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையால் குறித்த கிணற்றை தூய்மை செய்யும் பணிகள் இடம்பெற்றுள்ளன.

காலாகாலமாக பிரதேச சபையினால் நிலாவரை ஆழமற்ற கிணறு உள்ளிட்ட பகுதிகள் சபையின் சொத்தாக பராமரிக்கப்பட்டன.

பிரதேச சபையின் நேரடி முகாமைத்துவத்தின் சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் எல்லை மதில்கள் அமைக்கப்பட்டு ஆழமற்ற கிணற்றினைச் சுற்றி பாதுகாப்பு, உலோக வேலிகள், பிரதேசத்தினை அழகுபடுத்தும் மின்குமிழ்கள், பார்வையாளர் இருக்கைகள், நடைபாதைகள் அமைக்கப்பட்டு திறன்பட வலயம் முகாமை செய்யப்பட்டு வந்தன.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாயம்...! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாயம்...! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தொல்லியல் திணைக்களம்

2021 ஆம் ஆண்டுக்கும் 2023 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மூன்று தடவைகள் பூசகமான முறையில் இராணுவத்தினருடன் இணைந்து தொல்லியல் திணைக்களம் அத்திவாரம் வெட்டியது.

ஊடக அழுத்தத்தால் கவனிப்பாரற்றிருந்த நிலாவரை கிணறு தூய்மிப்பு! | Cleaning The Neglected Nilavarai Well

அம் முயற்சி பௌத்த சிங்கள பேரினவாத நோக்கில் விகாரை அமைக்கும் முயற்சியென குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில், அப்போதும் தவிசாளராக பதவி வகித்த தியாகராஜா நிரோஷ் அவற்றை தடுத்திருந்தார்.

இதனையடுத்து அவர் தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்கு இடையூறு விளைவித்தாகத் குற்றச்சாட்டில் தவிசாளர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக வழக்கினை எதிர்கொண்டதுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இவ் வழக்குகள் பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனையில் உள்ளன.

NPP அரசின் மீது சந்தேகத்தை கிளப்பும் செல்வம் எம்.பி.

NPP அரசின் மீது சந்தேகத்தை கிளப்பும் செல்வம் எம்.பி.

கட்டண அறவீடு

பிரதேசத்தில் உள்நுழைபவர்களுக்கான கட்டண அறவீடு தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தினால் தடைகளும் ஏற்படுத்தப்பட்டு வந்தன. இவ்வாறான காரணங்களினால் சபை பதவியிழந்த பின்பு பிரதேச சபையினால் குறித்த பகுதியில் செயற்பட முடியவில்லை.

ஊடக அழுத்தத்தால் கவனிப்பாரற்றிருந்த நிலாவரை கிணறு தூய்மிப்பு! | Cleaning The Neglected Nilavarai Well

அதனால் அப் பிரதேசம் கழிவுகளாலும் பற்றைகளினாலும் மக்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு பாதிக்கப்பட்டுக் காணப்பட்டது.

இதனையடுத்து சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் காட்டமான கண்டனங்கள் அண்மைய நாட்களாக வெளியிடப்பட்டன.

இதனைத்தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் , சபை உறுப்பினரும் குழுத்தலைவருமான அ.கமலறேகன், பணியாளர்கள், பிரதேச மக்கள் இணைந்து குறித்த பகுதியை நேற்று (07.01.2026) துப்புரவு செய்துள்ளனர்.

சபையின் சொத்தாக உடைவடைந்த நிலையில் உள்ள இருக்கைகள், நுழைவாயில் கதவு போன்றன திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.

பெயர்ப் பலகையிடப்பட்டுள்ளதுடன் பொலித்தீன் தடை மற்றும் சுத்தத்தினைப் பேணுவதற்கான விளம்பர பலகைகளும் பிரதேச சபையினால் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: அரசாங்கத்தின் நிலைப்பாடு!

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: அரசாங்கத்தின் நிலைப்பாடு!

லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு!

லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026